Triplicane, Chennai
அனைத்து விதமான ரிட் மனுக்கள் (ஆணையிடும் நீதிப்பேராணை, தடைமாற்று நீதிப்பேராணை, உரிமைவினா நீதிப்பேராணை, தடை நீதிப்பேராணை & ஆட்கொணர்வு நீதிப்பேராணை) தொடர்பான இலவச சட்ட ஆலோசனை.
அதாவது ஒரு பாதிக்கப்பட்ட நபர் முறையான மனு மூலம் நீதிமன்றத்தை அணுகி எழுத்து மூலம் அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனு தான் ரிட்!
- அரசாங்கம் அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
- பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.
- உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.
- நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம். அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம்.