Triplicane, Chennai
தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யா விட்டால், அதை செய்ய ஆணையிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யலாம். உதாரணமாக வருவாய்த்துறை அலுவலகத்தில் நிலம் அளவீடு செய்ய கோரி அல்லது வேறு ஏதேனும் கோரி மனு அளித்து, நடவடிக்கை எடுக்காமலோ அல்லது காலதாமதம் செய்தாலோ, மனுவின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மனு தாக்கல் செய்வது.
ஒரு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கீழமை நீதிமன்றம் அல்லது உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், மேற்படி உத்தரவால் பாதிக்கப்பட்ட நபர் அந்த உத்தரவை மேலாய்வு செய்து ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பது. உதாரணமாக அரசாங்கம் ஒரு கண்மாயில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை நடத்தி அந்த ஏலமானது விதிமுறைகளை பின்பற்றவில்லை என அறியும் பட்சத்தில், அந்த ஏலத்தை ரத்து செய்யவும், மேலும் அந்த ஏலத்தை விதிமுறைப்படி முறையாக நடத்த உத்தரவிடகோரி கேட்பது.
ஒரு அரசு அலுவலர் ஒரு குறிப்பிட்ட பதவியில் தகுந்த தகுதியின்றி, முகாந்திரமின்றி, சட்டங்களையும், விதிகளையும் பின்பற்றாமல் பொறுப்பில் இருப்பது அறியப்பட்டு, அவரை அப்பதவியைவிட்டு நீக்கிரவு செய்ய தகுந்த விளக்கங்களை கோரி, அந்த நபரின் பதவிக்கான தகுதி உரிமையை எதிர்த்து தாக்கல் செய்வது.
ஒரு அரசு அதிகாரி தனது அதிகார வரம்பிற்க்கு அப்பாற்பட்டு ஒரு செயலை செய்ய தவறினாலோ அல்லது செய்வதிலிருந்தோ அல்லது ஒரு ஆணையை பிறப்பிப்பதிலிருந்தோ, தடுத்து நடவடிக்கை எடுக்க தாக்கல் செய்வது. உதாரணமாக ஒருவரது வீட்டின் அருகில் எவ்வித முன் அனுமதியின்றி திடீரென ஒரு செயலை செய்தால் (ஒரு குப்பை கிடங்கு நிறுவ முற்பட்டால்), அந்த செயலை தடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்வது.
ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரையோ அல்லது அவரது உடலையோ நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தச் சொல்லி உத்தரவிடும்.